திருப்பூரில் அபராதம் விதிக்கும் போலீசார்..!
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பேருந்து நிலையம் வளாகத்தில் முன்புறம் இருசக்கர வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்தனர்.
இதனையும் மீறி இருசக்கர வாகனங்களை நிறுத்திய வாகன ஓட்டிகளுக்கு திருப்பூர் மாநகர போலிசார் அதிரடியாக அபராதம் விதித்தனர். வாகனத்தின் உரிமையாளர்கள் இல்லாத நிலையில் அபராதம் விதித்து நோட்டீசை ஒட்டிச் சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




