பரந்தூர் நிலத்திற்கு மார்ச் முதல் இழப்பீடு..!
பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, இழப்பீடு வழங்கும் பணி மார்ச்சில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தந்த பகுதியில் உள்ள வழிகாட்டி மதிப்புக்கு ஏற்ப, வீடு, நிலம் வழங்கியோருக்கு 3 மடங்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உதாரணத்திற்கு ₹1 லட்சம் மதிப்புள்ள நிலம் வழங்கினால், அரசு 3 லட்சமாக இழப்பீடு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




