--- --:--:-- --

ஜோபைடன் மனைவிக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசு..!

1

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவிக்கு நாட்டின் முதல் குடிமகள் என்ற வகையில் ஏராளமான பரிசுகளை வெளிநாட்டு தலைவர்கள் கடந்த ஆண்டு அளித்திருந்தனர். இதில் பிரதமர் மோடி அளித்த 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7.5 கேரட் எடையுள்ள வைரமே மிக விலை மதிப்புள்ள பரிசு என்று தெரியவந்துள்ளது.

 

அமெரிக்க அரசு வெளியிட்டிருக்கும் வருடாந்திர அறிக்கையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் எகிப்து அதிபரின் மனைவி ஆகியோர் மதிப்பு வாய்ந்த பரிசுகளை வழங்கியுள்ளனர்.

 

அமெரிக்க சட்டப்படி அதிபர் மாளிகையில் உள்ளவர்கள் தங்களுக்கு கிடைத்த பரிசுகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon