கோவையில் திடீர் பதற்றம்.. கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!
கோவையில் கேஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததில், வாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவைக்கு எல்பிஜி கேஸ் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி வந்தது.
கோவை கணபதி பகுதியில் உள்ள குடோனுக்கு சென்று கொண்டிருந்த போது, உப்பிலிபாளையம் மேம்பாலத்தில், கட்டுப்பாட்டை இழந்த லாரி தலை குப்புற கவிழ்ந்தது.
தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், டேங்கரில் இருந்து வெளியான வாயுவை தண்ணீர் ஊற்றி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற பொறியாளர்கள், வாயு கசிவு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.அதே சமயம், டேங்கர் லாரியை கிரேன் மூலம் மீட்பதற்கான பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




