--- --:--:-- --

பொங்கல் பரிசு தொகுப்பு.. டோக்கன் விநியோகம் இன்று தொடக்கம்..!

7

தமிழகத்தில் பொங்கல் பரிசுதொகுப்புக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்க உள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி 2.20 கோடி குடும்பத்தை அவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி சேலையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்க உள்ளனர்.

 

டோக்கனில் பரிசு தொகை பெறுவதற்கான நாள் நேரமாகிய விபரங்கள் இடம் பெற்று இருக்கின்றன. தினமும் காலையில் 100 பேர் பிற்பகலில் 100 பேர் பொங்கல் தொகை வாங்கும் வகையில் டோக்கன் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon