--- --:--:-- --

புத்தாண்டு அன்று நடந்த சோகம்..மகனின் கண் முன்னே தாய் பலி..!

6

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே மாடு மோதியதால் பைக்கில் இருந்து கீழே விழுந்த பெண் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 52 வயதான சிங்காரி தனது மகனுடன் பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

 

அப்பொழுது சாலையில் சென்ற குதிரை வண்டியில் இருந்து வந்த சப்தத்தால் மிரண்டு ஓடிய மாடு ஒன்று பைக் மீது மோதியதில் தாயும் மகன் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

 

தலையில் பலத்த காயம் அடைந்த சிங்காரி மகன் எதிரே உயிரிழந்தார். சாலையில் மாடுகளை அவிழ்த்து விடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon