--- --:--:-- --

கிறிஸ்துமஸ் பண்டிகை..ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பு..!

8

கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறைக்காக நாளை மற்றும் 31ம் தேதி தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூட்ட நெரிசலில் தவிப்பதற்காக தாம்பரம் – கன்னியாகுமரி இடையே வரும் நாளை மற்றும் 31-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

 

தாம்பரத்திலிருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதே நாள் மதியம் 12:15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். கன்னியாகுமரியில் இருந்து 25 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் புறப்படும்.

 

இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 4:20 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon