--- --:--:-- --

தெருவில் பிஞ்சு சடலம்..கொடூர கொலைக்காரி..!

7

திருவண்ணாமலையில் பச்சிளம் குழந்தையை தெருவில் வைத்து சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் தேடி வருகின்றனர். தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் தெருவில் கிடந்த குழந்தையின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

 

திருவண்ணாமலை ஆவனாம்பேட்டை பகுதியில் பிறந்த ஒரு சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் வீசி சென்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் குழந்தையை வீசி சென்றது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

தவறான உறவின் மூலம் பிறந்த குழந்தை என்பதால் குழந்தையை தெருவில் வீசி சென்று விட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை பெற்றெடுத்து நடுத்தெருவில் வீசிச் சென்ற கல்நெஞ்சம் கொண்ட பெண் யார் என்பது விரைவில் தெரிந்து விடும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon