விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடியில் திட்டம்..!
விவசாயிகள் அறுவடைக்கு பின்னும் எளிதாக கடன் பெற உதவும் வகையில் ஆயிரம் கோடிதான கடன் உதவி திட்டத்தை மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி அறிமுகப்படுத்தியுள்ளார்.
விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத பொழுது அவற்றை அரசின் கிடங்குகளில் பாதுகாத்து வைக்க அனுமதிக்கப்படும் நிலையில் அத்தகைய தருணங்களில் மின்னணு ரசீது வழங்கப்படுகிறது.
அதனை பயன்படுத்தி அடுத்த சாகுபடிக்கான செலவுகளுக்கு வங்கிகள் மூலம் விவசாயிகள் கடன் பெறலாம். ஆனால் இந்த ரசீதுகள் மீது வங்கி கடன் பெறுவதில் சிக்கல் இருப்பதாக புகார் வெளியான நிலையில் வங்கிகள் எளிதாக கடன் வழங்க ஆயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
அதிலும் மின்னணு ரசீதுகள் அடிப்படையில் நான்காயிரம் கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக விவசாய துணை செயலாளர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





