--- --:--:-- --

லாரி ஏறி இறங்கியதில் சகோதரன் கண் முன் சகோதரி பலி..!

7

வேலூர் காட்பாடி சாலையில் அஸ்வினி என்பவர் வேலைக்கு செல்வதற்காக அவருடைய சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதாமல் இருப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் பிரேக் பிடித்துள்ளார்.

 

அப்பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த தண்ணீர் லாரி அஸ்வினி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon