இயக்குநர் ஜெயபாரதி காலமானார்

மிழில் மாற்று சினிமாவை இயக்குவதில் உறுதியாக இருந்த இயக்குநர் ஜெயபாரதி (77) சற்றுமுன் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

 

1979ஆம் ஆண்டு ‘கிரவுட் ஃபண்டிங்’ முறையில் ‘குடிசை’ படத்தை இயக்கினார் ஜெயபாரதி. பின்னர், 2010ஆம் ஆண்டு புத்திரன் படத்தை இயக்கி தமிழக அரசின் விருதுகளை வென்றார்.