ரயில்வேயை தனியார்மயம் ஆக்காதீங்க: எதிர்க்கட்சிகள்
ரயில்வேயை மத்திய அரசு தனியார்மயமாக்க திட்டமிட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியானபடி உள்ளன. இதனை மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பின.
சமாஜ்வாதி எம்பி நீரஜ் மவுரியா பேசியபோது, ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்தால், ஏழைமக்கள் பாதிக்கப்படுவர் என்று கூறினார். TMC எம்பி பாபி ஹல்தார் பேசியபோது, மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




