--- --:--:-- --

சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது..சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

3

திரைப்பட விமர்சனம் என்பது திரைப்படங்கள் மற்றும் திரைப்பட ஊடகத்தை பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு ஆகும். சினிமா விமர்சனங்கள் என்பது தற்பொழுது படத்தின் ஒரு தலை எழுத்தையே தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறது.

 

ஒரு திரைப்படத்தின் முதல் ஷோ பார்த்து youtube, instagram போன்ற சமூக வலைதளங்களில் போடப்படும் விமர்சனங்களை பார்த்த பிறகு அந்த திரைப்படத்திற்கு போகலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

 

இதனால் விமர்சனங்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் விதத்தில் இருக்கின்றன. சமீபத்தில் வெளியான இந்தியன் 2, வேட்டையன் கங்குவா போன்ற திரைப்படங்கள் தோல்வியை தழுவியதாக பல விமர்சனங்கள் இருந்தன. இதில் குறிப்பாக கங்குவா படம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.

 

இதனால் இந்த சினிமா விமர்சனங்களை தடை செய்ய கோரி திரைத்துறையினர் சார்பிலும் தயாரிப்பாளர்கள் சார்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் சினிமா விமர்சனங்கள் வெளியேற தடை கோரி தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை ஹை கோர்ட்டின் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

 

அதில் திரைப்படம் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்கு எந்த வித விமர்சனங்களையும் youtube இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது என குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி எஸ்.சௌந்தர் விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க இயலாது என தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon