--- --:--:-- --

பல காதலிக்கு பரிசு வாங்குவதற்காக வங்கியை கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்..!

7

காதலிகளுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்க வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற உத்தர பிரதேச இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷாபித் கான் என்ற இளைஞர் கன்னட நாட்டில் உள்ள பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்து உள்ளார்.

 

தனது காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை அனுப்புவதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை அடிக்க முயன்றுள்ளார். கடந்த 31ஆம் தேதி இரவு வங்கிக்குள் நுழைந்த சாஹித் கான் லாக்கரை உடைக்க முடியாமல் திரும்பியுள்ளார்.

 

இந்த கொள்ளை முயற்சி குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 70க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஷாஹித் கானை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இளைஞர் உத்தர பிரதேசம் மற்றும் கேரளாவில் உள்ள மேலும் இரண்டு பெண்களுடன் இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகி வந்துள்ளார்.

 

அவர்களுக்கு ஒரு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுக்க இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon