--- --:--:-- --

அரசு பேருந்து ஓட்டுனர் மடியில் அமர்ந்து அடம் பிடித்த போதையாசாமி..!

6

திருப்பூரில் மது போதையில் அரசு பேருந்து ஓட்டுனரின் மடியில் அமர்ந்து தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் காந்திநகர் சிக்னல் அருகே கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

 

அரசு பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. அரசு பேருந்து வழிமறித்து ஓட்டுனர் மடியில் அமர்ந்து தகராறு செய்ததாக தெரிகிறது. ஓட்டுனர் ரகுராம் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரதீப் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon