சுங்கச்சாவடியில் இலவச அனுமதி வழங்க கோரி வட்டாட்சியரிடம் மனு..!
விழுப்புரம் மாவட்டம் நஞ்சுகொண்டான் சுங்கச்சாவடியில் செஞ்சி பகுதியை சேர்ந்தவர்களுக்கு இலவச அனுமதி வழங்க கோரி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் ஊர்வலமாக சென்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
செஞ்சி பகுதி பொதுமக்கள் வாகனங்களை செல்லும் பொழுது சுங்கச்சாவடிகள் கட்டணம் செலுத்தி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார் என்றும் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்தபடி சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையை காட்டி இலவசமாக செல்லலாம் என்ற அனுமதியை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





