பேருந்தில் கொட்டிய மழைநீர்..அதிர்ச்சிக்குள்ளாகும் வீடியோ..!
அரூர் அருகே பேருந்தில் கொட்டிய மழை நீரால் பேருந்து பயணிகள் இருக்கையில் அமர முடியாமல் நின்று பயணித்தனர். தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து தீர்த்தமலை வழியாக பெரியப்பட்டி செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்றின் மேற்கூரையிலிருந்து மழை நீர் இருக்கையில் கொட்ட ஆரம்பித்தது.
இதனால் பேருந்து பயணிகள் அமர முடியாமல் நின்றே பயணித்தனர். இது குறித்து பெரும் அவதிக்குள்ளான பேருந்தில் பயணிகள் இதுபோன்ற ஒரு சில அரசு பேருந்துகள் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் என்று போக்குவரத்து துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





