--- --:--:-- --

காலி செய்ய முடியாது..அதிகாரிகளை விரட்டி அடித்த பொதுமக்கள்..!

5

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் விரட்டி அடித்தனர். சேலம் மாநகராட்சியில் உள்ள கோட்டை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. மேலாக 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

 

முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த கட்டிடங்கள் பழுதடைந்தது. அதன் காரணமாக வீடுகளை புனரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கிடையே வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் குடியிருப்புகளுக்கு சென்று வீட்டை காலி செய்யும்படி கூறியதாக தெரிகிறது.

 

மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை விரட்டி அடித்தனர். திடீரென வந்து காலி செய்யும்படி கூறினால் தாங்கள் எங்கே செல்வோம் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon