--- --:--:-- --

சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

1

தென் தமிழ்நாடு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதன் காரணமாக சென்னையில் வரும் திங்கட்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

இதேபோன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் வரும் செவ்வாய்க்கிழமை  மிக கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

செவ்வாய்க்கிழமை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை  பெய்யலாம் என்றும் கணித்துள்ளது.புதன்கிழமை சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon