3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து..!
மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை அடையாறு, தேனாம்பேட்டை மண்டலங்களில் 3 நாட்களுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.
செப்டம்பர் 24 காலை 9 மணி முதல் செப்டம்பர் 26 அதிகாலை 4 மணி வரை மந்தைவெளி ராமகிருஷ்ண மடம் சாலையில் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது.
முன்னெச்சரிக்கையாக தேனாம்பேட்டை, அடையாறு பகுதிவாசிகள் குடிநீரை சேமித்து வைக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




