சென்னையின் திடீர் பவர்கட்..அவதியில் மக்கள்..!
மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. சென்னை மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில் உயர் மின்னழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் பெரும்பாலான இடங்களில் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருவெற்றியூர் தண்டையார்பேட்டை வியாசர் பாடி ஆவடி அம்பத்தூர் திருவேற்காடு மதுரவாயில் ராயப்பேட்டை மந்தைவெளி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.
துண்டிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட மாநில துணை மின் நிலையத்தில் சீரமைக்கும் பணிகளை மின்சார வாரியத்தினார் துரிதமாக மீட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





