ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்..!

யிற்சிப் பெண் மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு கொல்கத்தா ஆர்ஜிகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து போராடினர்.

 

பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளப்பட்ட பயிற்சி பெண் மருத்துவர் நீதி கேட்டும் பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தியும் போராட்டங்கள் கொல்கத்தாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

அதன்படி ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் போராட்டக்காரர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து போராடினர். நீதி வேண்டும் என்ற வாசகம் தெரியும் வகையில் மெழுகுவர்த்திகளை வரிசையாக அடுக்கி வைத்து போராடினர்.

 

இதைப் போல் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளிலும் இரவு கூடிய மக்கள் செல்போனில் டார்ச் லைட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவளிக்கும் வகையில் கொல்கத்தா ஆளுநர் மாளிகையில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன.

 

மேற்கு வங்க மாநில ஆளுநர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து போராட்டத்திற்கு ஆதரவளித்தார்.