கிருஷ்ணகிரியில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நலவன்பட்டி பகுதி வழியாக செல்லும் பேருந்தில் நேற்று மாலை பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்துள்ளனர்.
கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்ததாக கூறப்படும் நிலையில் பேருந்து ஆசிரியர் நகர அருகே சென்ற பொழுது இரண்டு மாணவர்கள் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.
பின்னர் பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில் காயமடைந்த இரண்டு மாணவர்களை மீட்ட சக பயணிகள் ஊத்தங்கரை மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மிகவும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக மாற்றுப் பேருந்துகளையும் கூடுதல் பேருந்துகளையும் இயக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
குழியில் தவறி விழுந்த சிறுமி..நீண்ட நேரம் போராடி மீட்பு..!
சாக்கு மூட்டையில் எலும்புக்கூடுகள்..பீதி அடைந்த மக்கள்..!
திமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி உட்பட மாற்றுக் கட்சியினர். 42 பேருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிப்பு.....
குழந்தையை விற்பனை செய்த 3 பேர்..!
3 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
சிறுமியை மிரட்டி காரில் கடத்திய பாலியல் தொல்லை..!