--- --:--:-- --

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்..!

3

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., ஈரோடு மண்டல பொது மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற 06.09.2024 வெள்ளிகிழமை 07.09.2024 சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை மற்றும் 08.09.2024 ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த தினம் ஆகிய நாட்களில் ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். எனவே இவ்வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon