ஷேக் ஹசீனாவுக்கு முகமது யூனுஸ் எச்சரிக்கை
ஷேக் ஹசீனா தொடர்ந்து இந்தியாவில் இருக்க, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் நிபந்தனை விதித்துள்ளார். வங்கதேச அரசு அவரை திரும்ப அழைக்கும் வரை, இந்தியாவில் அவர் இருக்க வேண்டுமானால், அமைதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் இருந்து கொண்டு, அரசியல் கருத்தை அவர் தெரிவிக்கக் கூடாது என்றும், சில சமயம் அவரது கருத்துக்கள் பிரச்னையாக மாறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




