விஜயின் கட்சி கொடி அறிமுக விழாவிற்கு வராத சங்கீதா..!
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார். பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜயின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
ஆனால் அவரது மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ளாதது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சில மாதங்களுக்கு முன் விஜய்யும் சங்கீதாவும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியான நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்பொழுது சங்கீதா இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
சங்கீதாவுக்கு விஜய் கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் விழாவிற்கு வரவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





