--- --:--:-- --

திருவாடானை நிழற்குடை முன்பு குவிக்கப்பட்டுள்ள மணலால் பயணிகள் அவதி..!

4

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மிக முக்கியமான இடமாக அரசு தலைமை மருத்துவமனை, காவல் நிலையம், தாலுகா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், என பல்வேறு அலுவலகங்கள் உள்ளது.

 

இங்கு வந்து செல்ல பேருந்து நிறுத்தம் உள்ளது. நோயாளிகள், பொதுமக்கள், அலுவலர்கள் பேருந்து  அனைவரும் நிழற்குடையில் இளைப்பாரி  பேருந்துகளுக்கு செல்வது வழக்கமாக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை இடித்து அந்த மணலை நிழற்குடை முன்பாக கொட்டி வைத்துள்ளனர். இதனால் பயணிகள் மட்டுமல்லாமல் அனைத்து துறை அலுவலர்கள், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

இன பந்தி ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியவில்லை என தெரிவித்தனர். எது எப்படி இருந்தாலும் உடனடியாக இந்த மணலை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon