செங்கல்பட்டில் வெறிநாய்க்கடித்து மூவருக்கு சிகிச்சை..!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒரே நாளில் ஒரு குழந்தை உட்பட இரண்டு பேரை வெறிநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த டேனியல் என்பவரது நான்கு வயது மகன் ஜெருசன் வீட்டின் எதிரில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது வெறி நாய் கடித்துள்ளது. பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

 

விக்னேஷ் என்பவரையும் கடித்துவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளது. பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் உலா வரும் இது போன்ற வெறி நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.