ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே காணாட்டங்குடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங்கலோன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியராக ராமநாதபுரத்திற்கு பொறுப்பேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொள்ளும் முதல் விழாவாகும். இந்நிகழ்வில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் துறை சார்ந்த திட்டங்கள் பற்றிய கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கூறுகையில் அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது, காலை உணவு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்றும் இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் மூலம் 9,94,222 ரூபாய் அளவிலான நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளது எனவும் விளிம்பு நிலை மக்களுக்கான ஈ பட்டா மாறுதல் உத்தரவு, இயற்கை மரண நிவாரணத் தொகை வழங்கும் உத்தரவு, முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விலையில்லா பொருட்கள், தையல் இயந்திரம், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரண்டு சக்கர வாகனம். தார்ப்பாய், வேளாண் உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு, விதை தொகுப்பு, மிளகாய் குழித்தட்டு நாற்றங்கால் என மொத்தம் 63 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினர் குறைகளை 30 நாட்களுக்குள் சரிசெய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வில் திருவாடானை தாசில்தார் அமர்நாத் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்