இன்று முதல் பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்..!

க்டோபர் 31ம் தேதியன்று கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகர காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் இன்று முதல் செப்டம்பர் 12ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கீழ்கண்ட ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

1. விண்ணப்பப்படிவம் AE 5 ல் ரூ. 2/- மதிப்புள்ள நீதிமன்றவில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

 

2. உரிமக் கட்டணம் ரூ. 1200/- ஆன்லைனில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

3. பட்டாசு இருப்பு வைத்து விற்கப்படவுள்ள இடத்தின் வரைபடம் 6 நகல்கள் வரைபடத்தில் சம்மந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிடபடவேண்டும். அதில் மனுதாரர் தனது கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.

 

4. பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்தக் கட்டிடமாக இருப்பின் 2024-2025 ம் ஆண்டுக்குரிய சொத்துவரி இரசீது இணைக்கப்பட வேண்டும்.

 

5. வாடகை கட்டிடமாக இருப்பின் 2024 2025 ம் ஆண்டுக்குரிய சொத்துவரி இரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டிட உரிமையாளருடன் ரூ. 20- மதிப்புக்கு குறையாத முத்தரை தாளில் ஏற்படுத்திக்கொண்ட வாடகை ஒப்பந்த ஆவணம்.

 

6. மாநகராட்சி /பொதுப்பணித்துறை மற்ற துறை கட்டிடமாக இருப்பின் அத்துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் இணைக்கப்பட வேண்டும்.

 

7. பட்டாசு உரிமம் பெறுவதற்கான மாநகராட்சிக்கு கட்டிய உரிமக் கட்டணம் செலுத்திய இரசீது இணைக்கப்பட வேண்டும்.

 

ஆவணங்களுடன் செப்டம்பர் 12ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு முன்பாக விண்ணப்பங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். முழுமையாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு விசாரணைக்கு பின் காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை கண்ணோக்கில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக உரிமம் வழங்கப்படும். 12ஆம் தேதிக்கு பின் விண்ணப்பம் சமர்ப்பிக்க காலக்கொடு நீட்டிப்பு வழங்கப்படாது. குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறபடாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்ற தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.