ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பொறுப்பு..!

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், சென்னை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் முதன்மைச் செயலாளர் சி.விஜயராஜ் குமார், திருப்பத்தூர் மாவட்டத்திற்கும், வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்னிட், திண்டுக்கல் மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இதே போன்று, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை, நாமக்கல், நாகை ஆகிய 11 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும், இயற்கை பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.