--- --:--:-- --

மதுரை ஒத்தக்கடையில் பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..!

9

மதுரை ஒத்தக்கடை பகுதியில் பெண் ஒருவரை இளைஞர் தாக்கிய அச்சுறுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

ஒத்தக்கடை மற்றும் நரசிம்மர் பகுதிகளில் சுற்றி தெரியும் இவருக்கு அக்கம் பக்கத்தினர் அப்பொழுது உணவு வழங்கி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் சாலையில் செல்வோர்களிடம் சிகரெட் கேட்டு வாங்கித் தர மறுத்தவர்கள் மீது இளைஞர் தாக்குதல் தொடுத்த வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் பெட்டிக்கடையில் நின்றிருந்த பெண் ஒருவரை இளைஞர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இளைஞரின் இந்த செயலால் சாலை விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி மக்கள் போலீசாரை வலியுறுத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon