பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாக தொடக்கம்..!
பெரும் எதிர்பார்ப்புகளுடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக இன்று தொடங்குகிறது. 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்குகிறது. இதில் 26 நாடுகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
32 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. 117 வீரர் வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக இன்று தொடங்குகிறது.
இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற உள்ளது. ஒலிம்பிக் தொடக்க விழாவில் சரத் கமல், பி.வி.சிந்து ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





