25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!
கர்நாடகாவில் ஒரு குழந்தை 25 விரல்களுடன் பிறந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. கொன்னூரை சேர்ந்த பாரதி (35) என்பவர் சமீபத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தையின் ஒரு கையில் 7 விரல்களும், மற்றொரு கையில் 6 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்கள் இருந்துள்ளன. எனினும், குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




