--- --:--:-- --

தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை செய்யும் சிறுவன்..!

10

சேலத்தில் தனியார் பேருந்தில் சிறுவன் நடத்துனராக வேலை செய்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் முதல் ஏற்காடு அடிவாரம் வரை தனியார் மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

 

இந்த பேருந்தில் சிறுவன் ஒருவன் பேருந்து நடத்துனர் போல் டிக்கெட் வழங்கி வருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பயணிகளை ஏற்றுவது விசில் அடிப்பது போன்ற பணிகளை செய்யும் சிறுவன் படிக்கட்டில் நின்றவாறு ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

 

இதனிடையே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பேருந்து நிறுவாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon