--- --:--:-- --

சர்ஜரி செய்து கொண்ட ஷாலினி அஜித்..!

13

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில் அஜித் உடன் இல்லாமல், வெளிநாட்டில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்தது பேசுபொருளானது.

 

இருப்பினும் அஜித் அடுத்த நாள் சென்னைக்கு திரும்பி ஷாலினியை கவனித்துக்கொண்டார். அவர்கள் ஹாஸ்பிடலில் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆனது.சர்ஜரி முடிந்து சில தினங்கள் ஆகும் நிலையில் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு இருக்கிறாராம்.

 

சிகிச்சைக்கு பின் ஷாலினியின் உடல்நிலை தேறிவருவதாகக் கூறி இருக்கின்றனர் மருத்துவர்கள். இன்னும் ஓரிரு தினங்களில் ஷாலினி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருவார் என கூறப்பட்டு இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon