--- --:--:-- --

சட்டமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து இபிஎஸ் வருகை..!

3

இரண்டாவது நாளாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்று துறை ரீதியாக தொடங்குகிறது.

 

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் வினா விடை நேரம் தொடங்குகிறது, அப்பொழுது சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். இன்று தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை அளித்துள்ளனர்.

 

விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விஷசாராய விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர். கருப்பு சட்டையுடன் சட்டப்பேரவைக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.

 

விஷசாராய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம் அளிப்பார் எதிர்பார்க்கப்படுகிறது. நீர் வளம், இயற்கை வளம், தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. திறன் மேம்பாடு உள்ள துறைகளின் மானிய கோரிக்கை மீதும் விவாதம் நடைபெற உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon