--- --:--:-- --

ஆவணங்களை சரி பார்க்காமல் விற்கப்பட்ட வாகனம்..பெண் வாடிக்கையாளர் மீது தாக்குதல்..!

6

மயிலாடுதுறையில் உரிய ஆவணங்களை சரி பார்க்காமல் அவசரமாக விற்கப்பட்ட இருசக்கர வாகனத்தை திரும்ப தருமாறு கேட்டு பெண் வாடிக்கையாளரை தாக்கிய தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மயிலாடுதுறை மாவட்டம் ஆவையான் பகுதியைச் சேர்ந்த நிவேதா என்பவர் கடந்த 11ம் தேதி பூம்புகார் சாலையில் உள்ள நிறுவனத்தில் தனது கணவர் பெயரில் இருசக்கர வாகனத்தை 6,900 முன்பணம் கட்டி மாத தவணைக்கு வாங்கியுள்ளார்.

 

இந்த நிலையில் ஏற்கனவே குமார் இருசக்கர வாகனத்தை வாங்கி பணம் செலுத்தாதது tvs நிறுவனத்திற்கு தெரிய வந்ததை எடுத்து வாகனத்தை திருப்பித் தருமாறு நிவேதாவிடம் கேட்டுள்ளனர். ஆனால் நிவேதா இருசக்கர வாகனத்தை தரவில்லை என்று தெரிகிறது.

 

அதனால் டிவிஎஸ் நிர்வாகி சுந்தர்ராஜன் இருசக்கர வாகனத்தில் வந்த நிவேதாவை வழிமறித்து தாக்கியதில் நிவேதாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் அறுத்து ஆடை கிழித்ததாக கூறப்படுகிறது.

 

உடனே நிவேதா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சவுந்தரராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon