வழிவிட முயன்ற பொழுது நிகழ்ந்த விபத்து..!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 ஆயிரம் மீட்டர் எரி சாராயம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ரெட்டைவாய்க்கால் பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய பொழுது அதிக பாரம் காரணமாக சாலையோரம் கவிழ்ந்தது.

 

இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எளிதில் தீப்பற்ற கூடியது என்பதால் அசம்பாவிதத்தை எடுக்கப் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.