--- --:--:-- --

தொப்பூர் கணவாயில் லாரி, பஸ் நேருக்கு நேர் மோதல்..!

3

தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் அரசு பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

 

தொப்பூர் வனப்பகுதி சாலையில் சாலை பணி நடந்து வருவதால் இருவழி சாலையில் ஒரு சாலையில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இன்று காலை தர்மபுரியில் இருந்து புறப்பட்ட பேருந்து ஆஞ்சநேயர் கோயில் அருகே வந்த பொழுது லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon