போலீஸ் எனக் கூறி இருசக்கர வாகனத்தை வாங்கி விட்டு தவணை கட்டாத பெண்..!

கோவையில் இருசக்கர வாகனத்திற்கு இஎம்ஐ கட்டாமல் மோசடி செய்த போலி பெண் போலீசில் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தில் தினேஷ் என்பவர் பழைய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறார்.

 

இவரது கடைக்கு வந்த அம்பிகா என்ற பெண் தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்ட பெண் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில் சில மாதங்களாக இருசக்கர வாகனத்திற்கான தொகையை அம்பிகா செலுத்தாமல் இருந்ததால் தினேஷுக்கு சந்தேகம் இருந்தது.

 

மேலும் அவர் போலீஸ் எனக்கூறி ஏமாற்றியதும் தெரிய வந்தது. அந்த பெண் கைது செய்யப்பட்டார்.