ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் இவிஎம் மெஷின்கள் அனுப்பிவைப்பு..!

விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தலில் இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு தேவையான 5,075 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 

 

வட்டாட்சியர் தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் விக்ரவாண்டி தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.