எல்லா ஆண்களும் அப்படி இல்லை.. யாரை சொல்கிறார் ராஷ்மிகா?
நடிகை ராஷ்மிகா தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக வலம் வர தொடங்கி இருக்கிறார். அவர் நடித்த அனிமல் படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்தது.
அவ்வளவு வசூல் வந்தாலும் அதன் கதை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பெண்களை மோசமாக நடத்தும் வகையில் வந்த காட்சிகளை பற்றி பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.அனிமல் பட காட்சியை பதிவிட்டு ‘ஆண்களை நம்பவே கூடாது’ என பெண் ஒருவர் போட்ட ட்வீட்டுக்கு ராஷ்மிகா பதில் அளித்து இருக்கிறார்.
“திருத்தம்: முட்டாள் ஆணை நம்புவது பயங்கரமானது.. பல நல்ல ஆண்களும் இருக்கிறார்கள். அவர்களை நம்புவது ஸ்பெஷல் தான்” என ராஷ்மிகா பதிவிட்டு இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




