பயங்கரவாதி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம் – காவல்துறை அறிவிப்பு

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர் குறித்து துப்பு கொடுத்தால் 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 9ம் தேதி பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

 

பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 நபர்கள் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைத்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் பயங்கரவாதியின் படம் வரையப்பட்டுள்ளது.

 

இந்த படத்தை வெளியிட்டுள்ள காவல்துறை, இவர் குறித்து பயனுள்ள வகையில் துப்பு கொடுத்தால் 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

 

இதனிடையே கத்துவா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது, இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.