--- --:--:-- --

மது போதையில் தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் பத்திரமாக மீட்பு..!

4

தென்காசியில் மதுபோதையில் தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். தென்காசி மாவட்டம் ஆயக்குடி பகுதியில் சேர்ந்தவர் மகேந்திரன். கேரளாவில் வேலை செய்து வந்த அவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார்.

 

இதனிடையே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காரிமனைக்கு சென்று மது அருந்தியுள்ளார். பின்னர் மதுபோதையில் தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

 

இதனை அந்த வழியாக சென்ற பொது மக்கள் பார்த்து காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை உயிருடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon