--- --:--:-- --

திருமண நிகழ்வை முடித்து சென்ற கார் விபத்து..!

7

கடலூர் தென்பெண்ணை ஆற்றுக்குள் கவிழ்ந்த காரில் இருந்த ஐந்து பேரும் தண்ணீரில் நீந்தி கரை சேர்ந்தனர். ஆற்றின் குறுக்கே உள்ள தரை பாலத்தில் சென்ற அந்த கார் திடீரென ஆற்றுக்குள் கவிழ்ந்து முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது.

 

அதில் பயணம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரும் காரின் கதவை திறந்து கொண்டு நீந்தி உயிர் தப்பினர். தண்ணீரில் மூழ்கிய கார் இன்று பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon