--- --:--:-- --

விடுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்..!

9

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பெண்கள் விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மூந்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

 

இதில் 16 வீடுகள் உள்ள நிலையில் இதே இடத்தில் சுமார் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் வசிக்கும் இரண்டு விடுதியை அமைந்துள்ளது. இந்த நிலையில் 500 பேர் உபயோகப்படுத்தும் வகையில் செப்டிக் டேங்க் கட்டமைக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது.

 

இதனால் துர்நாற்றம் வீசி வருவதால் அந்த பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உரிய உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon