திடீரென ஐஸ் கம்பெனிக்குள் சென்று ஐஸ்கட்டி தயாரித்து வாக்கு திரட்டிய ராஜேந்திர பாலாஜி..!
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சாட்சியாபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவ ஆலயத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிறிஸ்துவ மக்களிடம் ஆதரவு கூறினார். கிறிஸ்துவ மக்களுக்கு என்றும் அதிமுக உறுதுணையாக இருக்கும் என்றும் விருதுநகர் தொகுதி திமுக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுடன் சாட்சியாபுரம் பகுதியில் இருந்து ஐஸ் கம்பெனிக்கு சென்று அங்கு எப்படி ஐஸ் தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொண்டு ஐஸ் தயாரித்து நூதன முறையில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





