ஐபிஎல் பார்த்துக் கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுனர்..!
செல்போனில் கிரிக்கெட் விளையாட்டு தொடரை பார்த்துக்கொண்டே பேருந்தை ஓட்டி பயணிகளின் உயிரோடு விளையாடிய தனியார் பேருந்து ஓட்டுநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரிலிருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். ஐபிஎல் தொடரை பார்த்துக் கொண்டே ஓட்டுநர் முன்னாள் சென்ற கார் மற்றும் அரசு பேருந்து மீது மோதுவது போல சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பயணிகள் உயிருடன் விளையாடிய ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளரிடம் கேட்டதற்கு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





