காவல் நிலையமும் முன் கையை பிளேடால் அறுத்துக் கொண்ட பெண்..!
திருச்சி துறையூரில் காவல் நிலையம் முன் பெண் ஒருவர் பிளேடால் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துறையூர் பகுதியைச் சேர்ந்த சம்பூரணம் என்பவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசித்து வந்த நிலையில் இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் சம்பூரணம் தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க சென்ற சம்பூரணத்தை போலீசார் ஒரு தலைப்பட்சமாக நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த சம்பூரணம், காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை அறுத்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் இது குறித்த தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





